பாகவதம் பாடலில்
[[ பாகவதம்
சாபமே வரமாகும்
இறப்பே அறியமென்றால்,
எத்தனை எளிது
முடிவுதான் தெரியுமென்றால்
சுமைகள் இறக்குதல் உடனே ஆகும்
கங்கை கரை அழைத்ததென்னை
கடவுளிடம் கொண்டு சேர்க்க.
பாம்புதான் சொல்லப்போகும்
வாழ்க்கை தான் பழுது என்று.
எத்தனை நாள் இதனை சுமக்க,
கழுட்டுவோம் பாம்பு சட்டை.
*
எத்தனை யுகங்களாகும்
அரிய அரசன் கிடைக்க.
இப்படியோர் கோபம் தான்
அந்தணர்க்கு அழகில்லையன்றோ.
எங்கு நான் தவறிப்போனேன்
பிள்ளையிடம் இதனை கடத்த.
பசியினால் எரிந்த மன்னன்
தவறுக்கா இத்தனை கோபம்.
மாற்றானின் மனம் அறிய
அந்தணன் எப்படி பிறந்தான்.
*
எத்தனை ஞானம் என் தந்தை
சமாதியில் இருக்கும்போதா
கழுத்தினில் பாம்பை கிடத்தும்
அரசனிவன் மனிதனா முதலில்.
சாகட்டும் இருந்து என்ன ?
என் வார்த்தை உண்மையென்றால்
சாகட்டும் இவன் ஏழு நாளில்.
பாம்பினால் சீண்டிய வாழ்க்கை
பாம்பினாலே முடிந்து போகும்.
Comments
Post a Comment