பிரம்மம் முழுமையானது.
பூரணம் என்பது என்ன ?
-----------------------------------------------------
"ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்
பூர்ண முதச்யதே| பூர்ணஸ்ய பூர்ண- மாதாய
பூர்ணமேவா வசிஷ்யதே||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:||
"பிரம்மம் முழுமையானது.
இந்தப் பிரபஞ்சமும் முழுமையானது.
முழுமையான பிரம்மத்திலிருந்து முழுமையான பிரபஞ்சம் தோன்றியுள்ளது.
முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது."
ஒரு தீபத்தில் இருந்து எண்ணிறந்த தீபங்கள் ஏற்றினாலும் முதல் தீபத்தின் முழுமை குறைவதில்லை.
அதுபோலவே ஏற்பட்ட தீபங்கள் அனைத்தும், முதல் தீபத்தைப் போன்றே, முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கிறது.
அகத்தியர் ஞானம் 30:
பாடல் எண் 12 இல்...
" கருணை தரும் அக்கினி ஆதித்தன் சந்திரன்
கலந்தொன்றாய் நின்றுது பூரணமே யாகும்
பொருள்நயமாய் அறிபவனே
புண்ணிய வானாகும்
புகழ்சொன்ன சற்குருவே ஆசானாகும்.."
அக்கினி, ஆதித்தன், சந்திரன் கலந்து ஒன்றாய் நின்ற "அது" முச்சுடர்- அதுவே பூரணமாகும்.
" ஏகாட்சர பூரணத்தைக் காணலாமே" -
சுப்பிரமணியர் ஞான சைதன்யம்108:71
ஏகாட்சரமே பூரணமாகும் .
அகத்திய மாமுனிவர் அருளிய பரிபூரணம்-1200
"உண்மையென்ற பூரணமே மவுனபீடம்
உத்தகலை ரவிமதி சென்றிருக்கும் வீடு"- என்றும்
" அறிவான பூரணமே ஆதி சோதி"
என்றும் அருளியுள்ளார்.
ஆதிசோதியாக- மவுன பீடமாக உள்ளதே பூரணமாகும்.
மிருகண்டு மகரிஷி அருளிய மெய்ஞானம் 30பாடல்எண்13
" அருளான வன்னி கதிர் மதியுங் கூடிய
அசைவற வொன்றாய் நிற்கப் பூரணந்தான்
வெருளாமல் அறிபவனே
முத்தன் ஆவான்
விதமுரைத்தோன் குரு என்னும் ஆசானாகும்"
குருவின் அருளால் நம் தேகாலயத்தில் சூரியன் சந்திரன் அக்கினி முச்சுடரும் ஒன்றாய் இணைந்து கூடி அசைவற்ற நிலையில் நிற்கையில் அதுவே பூரண நிலையாகும்.
" கலையான பதினாறும் பூரணமே ஆகும்" என்று இடகலையாகிய சந்திர கலை பதினாறு பெற்று விளங்கும் போது அது பூரணம் ஆகும் என்றும் அகத்தியர் குறிப்பிடுகிறார்.
Comments
Post a Comment