" ஒளி தேகம் - மரணமிலாப் பெரு வாழ்வு பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் "

இவர்கள் அனைவரும் தங்கள் தேகத்துடன் வெளியில் -ஒளியில் கலந்தவர்கள் - சமாதியோ , மரணமோ அடையவிலை என்பது குறிப்பிடத்தக்கது
1 தி ஞான சம்பந்தர் - இவர் சீர்காழி அருகே தம் திருமணத்தின் போது ஜோதியில் தானும் தம் மனைவியுடன் அவர் தம் தெய்வத் திருமணம் காண வந்த அனைவரையும் ஜோதியில் கலக்க வைத்த ஒப்பற்ற ஞானியாவார்
2 சுந்தரர் - இவர் கல் நொடித்தான் மலையில் திருக்கைலாயத்தில் சேர்ந்தார்
3 அவ்வையார் - இவர் திருக்கைலாயத்தில் சேர்ந்தார்
4 சேரமான் பெருமான் நாயனார் - இவர் திருக்கைலாயத்தில் சேர்ந்தார்
5 ஆண்டாள் - திருவரங்கத்தில் புகுந்தார்
6 பத்திரகிரியார் - திருவிடைமருதூரில் உள் புகுந்து மறைந்தார்
7 மீரா பாய் - இவர் தேகம் கண்ணனின் சிலை பிளந்து உள் வாங்கிக்கொண்டது
8 வள்ளல் பெருமான் - இவர் முத்தேக சித்தி பெற்று , தன் தேகத்தை அருள் அணுக்களாக வேதித்துக்கொண்டார் - இவர் தேகம் வெளியெங்கும் பரவி இருக்குது என்பது உண்மை
9 மாணிக்க வாசகர் பெருமான் - தில்லை திருச்சிற்றம்பலத்தில் புகுந்தார்
10 அப்பர் பெருமான் - இவர் திருக்கைலாயத்தில் சேர்ந்தார்
11 திருமூலர் - இவர் தம் சமாதி திருவாவடுதுறையில் இருந்தாலும் , இவர் தம் மந்திரத்தில் " எண்ணிலி கோடியுகம் இருந்தேனே " என்பதால் இவர் சமாதி மரணம் அடையவிலை என்பது உறுதி ஆகிறது
12 சிவவாக்கியர் பெருமான் - சித்தரில் இவர் ஒருவர் மட்டும் தான் திருச்சிற்றம்பலப்பிரவேசம் பற்றிப்பாடியுள்ளார்
வேறு எவரும் பாடியதாக இல்லை - எனவே இவரும் ” ஒளி தேகம் - சாகா தேகம் பெற்ற ஞானியாகத்தான் திகழ வேண்டும்.



Comments